ஒரே நேரத்தில் 5 இஸ்லாமிய நாடுகளை தாக்கும் இஸ்ரேல்- வெடிக்கும் 3ஆம் உலகபோர்? உலகநாடுகள் நடுக்கம்!
5 நாடுகள் மீது இஸ்ரேல் மோதி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் 150க்கும் அதிகமான ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும், இஸ்ரேலும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளாத நிலையில் இந்த தாக்குதல் இஸ்ரேலை தீவிரமாக்கியது.
தொடர்ந்து இன்று இஸ்ரேலில் இருந்து ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
இஸ்லாமிக் புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guards Corps அல்லது IRGC) தலைமையிடத்தையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. மேலும், சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
3ஆம் உலகபோர்?
இதன்மூலம் இன்று ஒரே நாளில் இஸ்ரேல் 3 நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில் பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாசுக்கு இடையேயான போரை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. லெபனானின் ஹிஸ்புல்லாக்களையும் சமாளித்து வருகிறது.
மத்திய கிழக்கில் இருக்கும் ஒரே யூத நாடு என்பது இஸ்ரேல் மட்டும் தான். இதனால் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, லெ பனான், ஈரான், சிரியா, ஈராக் என 5 இஸ்லாமிய நாடுகளுடன் மோதி வருகிறது. இது தற்போது 3ம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளியாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.