காசா எல்லையை சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல்!
Israel
Palestine
Israel-Hamas War
By Thahir
குண்டு மழைகளுக்கு இடையே காசாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் - காசா போர்
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.
இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு
வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் தங்கள் நாட்டு எல்லை பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.