உணவுக்காக காத்திருந்த மக்கள்; சுட்டுத் தள்ளிய இஸ்ரேல் - 150 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடந்து வருகிறது. ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படைகள் காசா நகரை குறிவைத்து போரை தொடங்கினர்.
காசாவில் இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 30 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
150 பேர் பலி
ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியும் இஸ்ரேல் போரை கைவிடுவதாக இல்லை. இதற்கிடையில், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காசா பகுதியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை பெறுவதற்காக வடக்கு காசா பகுதியில் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேல் இராணுவப் படைகள் திடீரென நடத்திய தாக்குதலில் 150 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் படுகாயமடைந்தனர். அந்தக் காட்சி காண்போரை கலங்கச் செய்தது.