1500 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய கப்பல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பொக்கிஷம்

israel archaeologist findings 1500 yrs old ship ring with jesus etched 1500 yrs ols ring found
By Swetha Subash Dec 23, 2021 07:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

இஸ்ரேலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக வீசிய புயலின் காரணத்தால் மூழ்கிய 2 கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது.

இஸ்ரேலிலுள்ள செசேரியா என்னும் துறைமுகத்தில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பாக புயல் ஒன்று வீசியுள்ளது.

இந்த புயலால் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கப்பல்கள் நீரில் மூழ்கிபோயின.

இந்நிலையில் தற்போது அந்த கப்பல்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வின் மூலம் ரோம பேரரசு காலத்தைச் சேர்ந்த வெண்கல நாணயங்களும், வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளது.

இந்த பொருட்களுக்கு மத்தியில் பச்சைக்கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பச்சைக்கல் பதித்த மோதிரத்தில் இயேசுவின் உருவம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.