மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் பொறுப்பேற்பு

Karnataka India
By Thahir Nov 24, 2022 09:46 PM GMT
Report

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் பொறுப்பேற்றுள்ளது.

குக்கர் குண்டு வெடிப்பு

மங்களூர் நாகுரி பகுதியில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் பயணித்த ஷாரிக் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

Islamic Resistance claims responsibility for cooker bomb blast

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும்தெரியவந்தது.

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

போலீசார் தீவிர விசாரணை 

இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதம் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

காத்ரி மஞ்சுநாத் கோயிலை தாக்க இந்த அமைப்பு குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த கடிதத்தை கைபற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற பெயரை தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று காவல்துறை கூறி உள்ளது.