அண்ணாவையும், கலைஞரையும் இணைக்க பாலமாக இருந்தது இஸ்லாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Indian Union Muslim League M K Stalin Chennai
By Thahir Mar 11, 2023 03:10 AM GMT
Report

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சென்னையில், கடந்த 8 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு ‘அகில இந்திய மாநாடு’ நடந்து வருகிறது.

இணைப்பு பாலமாக இருந்தது இஸ்லாம் 

இந்த மாநாட்டில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், தோழமை கட்சிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது.பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கப் பாலமாக இருந்தது இஸ்லாம் என்று கூறினார்.

Islam was the bridge that connected Anna and the artist -

யாராலும் பிரிக்க முடியாது

மேலும், சாதாரண சட்டடத்திற்குக் கூட ஆளுனர் ஒப்புதல் தரவில்லை ; சூதாட்டம், நுழைவுத்தேர்வால், ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் மசோதாவுக்கும் ஒப்புதல் தராமல் தடுக்கிறார்கள்.

Islam was the bridge that connected Anna and the artist -

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். திமுகவுக்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினார்.