ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

person year isis
By Jon Mar 06, 2021 05:46 AM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்.ஐ.ஏ. இந்தியாவில் பல்வேறு சமூக ஊடக தளங்களின் வழியே முஸ்லிம் இளைஞர்களை கவர்ந்து, வேலைக்கு அமர்த்தி தனது அடித்தளம் அமைய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது என கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 9ந்தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்தது.

இதுபற்றிய விசாரணை முடிவில், இம்ரான் கான் பதான் என்பவர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

இதில், 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 16 மற்றும் டிசம்பர் 16 ஆகிய நாட்களில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.