காபூல் குண்டு வெடிப்பு.. பெண்களைத் தாக்கும் ஐஎஸ்ஐஎஸ் -கே யார் இவர்கள்?

Kabul Afghans isisk
By Irumporai Aug 28, 2021 06:27 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் ஐஎஸ் - கே என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது உலகளாவிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சுமார் 20 வகையான பிரிவுகள் உள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தான பிரிவுதான் ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் கோராசன் பிரிவு.

கோராசன்  தெற்காசிய நாடுகளில் வலிமையாக உள்ளது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் மூலமாக ஐஎஸ்ஐஎஸ்-கே தோன்றியதாக கூறப்பட்டாலும் , இரு பயங்காரவாத அமைப்பிற்கு இடையே வேறுபாடு உள்ளது. தாலிபன்கள் பொதுவாக பெண்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவார்கள்.

ஆனால் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினர் பள்ளியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவார்களாம்.இதில் பிரசவ வார்டுகளிலும் தாக்குதல் நடத்தி கர்ப்பிணிகளையும் செவிலியர்களையும் கொன்றதாக கூறப்படுகிறது.

தாலிபன்களின் கீழ் இயங்கும் ஹக்கானி பிரிவோடு ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கத்துக்கு நல்ல தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தாலிபன்களின் ஹக்கானி நெட்வொர்க், ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம், பாகிஸ்தானில் இயங்கும் பிற அமைப்புகள் இணைந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த  சில காலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம் தாலிபன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. சில காலத்துக்கு முன்பாக, மேற்கத்திய நாடுகளுடன் ஆடம்பர ஹோட்டல்களில் பேச்சுவார்த்தை நடத்திய தாலிபன்கள் போர்க்களத்தையும் மறந்துவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக மிகத் தவறானது என்று ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது இதனா தாலிபனகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் - கே இயக்கமிடையே மோதல் தொடர்ந்தது.

தாலிபன்கள் அமைப்பிலிருந்து வெளியேறும் தீவிரவாதிகளை ஐஎஸ் அமைப்பினர் தளபதிகளாக ஆக்குகின்றனர். இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே தாலிபன்களை ஒடுக்கி ஆப்கானில்புதிய கிளையை உருவாக்க முயற்சிப்பதாகவும் அதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினரிடம் இருந்து வெளியேறும் தீவிரவாதிகளை, தங்களது அமைப்பில் சேர்த்து சர்வதேச பயங்கரவாத சதிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

மேலும் தாலிபன்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்கள் சுகாதாரத்துறையில் வேலை செய்யலாம் பத்திரிகையாளர்கள் செயல்படலாம்; பெண்கள் படிக்கலாம். நாங்கள் மாறிவிட்டோம்'என்றெல்லாம் பேசியது மற்ற தீவிரவாத இயக்கங்களை கோபமடைய செய்திருக்கலாம . அதனால்தான் இது போன்ற தாக்குதல்கள் ஆப்கானில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.