ராஷ்மிக்காவின் கதாபாத்திரத்தில் நான் நல்லா பொருந்திருப்பேன் - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி!
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மிக்காவின் கதாபாத்திரம் குறித்தும் தெலுங்கு சினிமா குறித்தும் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'.
இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் மத சார்புக்கு எதிராக உள்ளது என பலரும் எகிறது வந்த நிலையில், "ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என படக்குழு அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து வரும் எதிர்ப்புகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஸ்வர்யாவின் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேட்டி
இந்நிலையில், இவர் படத்தின் ப்ரோமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் தெலுங்கு திரையுலகம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், "எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன்.
ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை. புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருந்தார்.
ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருத்தமாக இருப்பேன் என்று உணர்கிறேன், நம்புகிறேன்" என்று கூறினார்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
