இந்திய அணியில் இருந்து விடைபெறும் சீனியர் வீரர் - ரசிகர்கள் சோகம்
தென்னாப்பிரிக்கா தொடருடன் இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் ஓய்வுப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
கடந்த கால மோசமான வரலாறுகளை மாற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் ரசிகர்கள் வருத்தப்பட கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தென்னாப்பிரிக்கா தொடருடன் அணிக்கெதிரான இந்த தொடரோடு இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.
வயது முதிர்வு காரணமாகவும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இஷாந்த் சர்மா கடந்த 12 மாதங்களில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்தியுள்ளார். மேலும் இளம் வீரர்களின் வருகையால் இஷாந்த் ஷர்மாவுக்கு இந்திய அணியில் அடிக்கடி வாய்ப்பு கிடைப்பதும் இல்லை என்பதால் அவர் ஓய்வுப் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This