விரல்கள் முழுவதும் தையல்: வெற்றிக்காக போராடிய இஷாந்த் ஷர்மாவுக்கு நேர்ந்த கதி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தத் தொடருக்குப் பின் இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனிடையே கடைசி நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் அடித்த பந்தை தானே தடுக்க முயன்றார் அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா. இதனால் அவரின் விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாந்த் ஷர்மாவுக்கு நடுவிரலும் மோதிர விரலும் 10 தையல்கள் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஆறு வார காலம் உள்ளதால் அதற்குள் அவர் தயாராகி விடுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.