கபில்தேவின் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா - குவியும் பாராட்டு
இந்திய பந்துவீச்சாளர்களில் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை இஷாந்த் சர்மா முறியடித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளனர்.
நேற்றைய பந்துவீச்சில் இந்திய அணி வீரர் இதாந்த் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் இவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.