ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி - இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் தேர்வு...!

Cricket Indian Cricket Team Australia Cricket Team Ishan Kishan Suryakumar Yadav
By Nandhini Jan 14, 2023 08:11 AM GMT
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்காக, இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 43.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் தேர்வு

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் ஈடுபாடு அவரது உடற்தகுதியை பொருத்து அறிவிக்கப்பட உள்ளது. 

ishankishan-suryakumaryadav-ind-vs-aus-crictracker