ஈசான் ஆற்றில் ராமர் பெயர் பொறிக்கப்பட்ட மிதக்கும் கல் கண்டெடுப்பு - வைரலாகும் அதிசய வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Aug 02, 2022 10:42 AM GMT
Report

ஈசான் ஆற்றில் மிதந்து வந்த கல்

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் ஈசான் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ராமர் பெயர் பொறிக்கப்பட்ட மிதக்கும் கல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தானா பேவர் கிராமத்தில் சிறுவர்கள் ஆற்றில் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது, கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று மிதந்து வருவதைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தவுடன் கல் ஒன்று மிதந்து வந்துள்ளது.

ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்லும் மக்கள்

அந்தக் கல் 5.7 கிலோ எடை கொண்டதாகவும், இந்தக் கல் இராமாயண காலத்தில் இலங்கைக்கு ராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும், ராமேஸ்வரத்திலிருந்து இந்தக் கல் வந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்தக் கல்லை பிரதிஷ்டை செய்து வழிபட கிராம மக்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தில் பரவியதால், மக்கள் படையெடுத்து வந்து இந்த அதிசய கல்லைப் பார்த்து விட்டுச் செல்கின்றனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Ishan River - stone - viral video