ரோகித் சர்மாவின் கேட்ட கேள்வி... - வேறலெவலில் பதிலளித்த இஷான் கிஷன் - வைரலாகும் வீடியோ...!

Rohit Sharma Viral Video Ishan Kishan Shubman Gill
By Nandhini Jan 20, 2023 12:47 AM GMT
Report

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ishan-kishan-rohit-sharma-shubman-gill

ரோகித் சர்மாவின் கேட்ட கேள்வி

இப்போட்டியில், இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் தற்போது முன்னேறி இருக்கிறார்.

இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு, இந்திய அணியின் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, இரட்டை சதமடித்த உனக்கு, அதன் பிறகு 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையேப்பா..? என்று ரோகித் சர்மா இஷான் கிஷனிடம் கேட்டார். அதற்கு, இஷான் நீங்கதான் கேப்டன் பிரதர் என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.