பிரபல மாடல் அழகியுடன் காதலில் விழுந்த இஷான் கிஷன் - யார் அந்த அதிதி?

Cricket Indian Cricket Team Ishan Kishan
By Jiyath Aug 16, 2023 10:17 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் காதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இஷான் கிஷன்

2016ம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.

பிரபல மாடல் அழகியுடன் காதலில் விழுந்த இஷான் கிஷன் - யார் அந்த அதிதி? | Ishan Kishan Dating Model Aditi Hundia

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக இரட்டை சாதமும் விளாசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இஷான்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இவரின் சிறப்பான பேட்டிங் திறமையால் இந்திய அணியில் நட்சத்திர வீரராகவும், உலகக்கோப்பைத் தொடருக்கான விக்கெட் கீப்பர் ரேசில் முன்னணியிலும் இருக்கிறார் இஷான்.

பிபல மாடலுடன் காதல்

இந்நிலையில் தற்போது 25 வயதாகும் இஷான் மாடலிங் துறையிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாக உள்ள அதிதி ஹுண்டியா என்பவருடன் காதல் உறவில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதிதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

பிரபல மாடல் அழகியுடன் காதலில் விழுந்த இஷான் கிஷன் - யார் அந்த அதிதி? | Ishan Kishan Dating Model Aditi Hundia

கடந்த 2017ம் ஆண்டு மிஸ் இந்தியா இறுதிப்போட்டியில் பங்கேற்றவர். மேலும் கடந்த 2017ம் ஆண்டு சூப்பர் நேஷனல் இந்தியா போட்டியில் பட்டமும் வென்றுள்ளார். இவரும் இஷான் கிஷனும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதிதி வங்கதேச ஒருநாள் தொடரின்போது இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசிய போது, அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் அதிதி.

இவர்களின் காதல் குறித்து இருவரிடம் கேட்டபோதும் எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை. இருவரும் பார்ட்டி ஒன்றில் சந்தித்துக் கொண்டதாகவும், பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.