ஐ.சி.சி. வெளியிட்ட தரவரிசை பட்டியல்... - கிடுகிடுவென முன்னேறி வந்த இஷான் கிஷன்...!

Cricket Indian Cricket Team Ishan Kishan
By Nandhini Dec 15, 2022 07:34 AM GMT
Report

ஐ.சி.சி. வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் முன்னேறி வந்துள்ளார்.

சாதனைப் படைத்த இஷான் கிஷன்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது.

இத்தொடரில் வங்காளதேசம் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி சார்பாக பேட்டிங் செய்ய வந்த இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப்பட்டார்.

ஆரம்பம் முதலே மாஸாக விளையாடிய இவர் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவர் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ishan-kishan-cricket-india-team

தரவரிசையில் முன்னேற்றம்

ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் கிடுகிடுவென எகிறி 37-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்திருக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.