தோனியால் தேவையில்லாமல் அவுட்டான இளம் கிரிக்கெட் வீரர் - ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகள் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இதனிடையே மும்பை அணி இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்க்கொள்ளவுள்ளது. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் இளம் வீரர் இஷான் கிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது தோனியின் மனது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடிக்கவே நான் முயற்சி செய்து வருகிறேன். ஒரு ஐபிஎல் போட்டி என்னை மிகவும் மன அழுத்தத்திற்கு உண்டாக்கியது. சென்னை அணிக்கு எதிரான அந்த போட்டியில் நான் அனைத்து பவுலர்களுக்கும் நன்கு சோதனைக் கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது தோனி மெதுவாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரிடம் ஏதோ கூறினார். அப்படி அவர் என்ன கூறினார் எனக்கு தெரியவில்லை.
ஆனால் அந்த சமயத்தில் இருந்து அப்படி என்ன சொல்லி இருப்பார் என என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்ததால் இம்ரான் தாஹிரின் அடுத்த பந்தில் ஷார்ட் டேர்ம் தேர்டு மேனிடம் கேட்ச் கொடுத்து நான் அவுட்டானேன். இப்போது வரை நான் ஏன் அப்படி செய்தேன் எனக்கு தெரியவில்லை என இஷான் கிஷன் கூறியுள்ளார்.