”எங்கேயும் நான் ராஜா” - கோலியின் ஆட்டத்தை வாயை பிளந்தபடி பார்க்கும் பிரபல கிரிக்கெட் வீரர்கள்
இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து இளம் வீரர்கள் வாயடைத்துப்போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தை நாளை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி மட்டுமே கடும் அழுத்தங்களுக்கு இடையேஅரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். இதனால் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தடுப்பாட்டம் மற்றும் சிக்ஸருக்கு விளாசுவது போன்ற பயிற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்து வேடிக்கை பார்த்து வந்த ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் வாயைப்பிளந்து பார்த்தனர்.
ஒவ்வொரு பந்தையும் விராட் கோலி எப்படி எதிர்கொள்கிறார், அவரின் ஸ்டைல், நிதானம் என அனைத்தையும் பார்த்து ரசித்த அவர்கள் இருவரும், ஒவ்வொரு பந்தை அடிக்கும் போதும் "சூப்பர்.. ஃபர்ஸ் க்ளாஸ் ஆச்சரியத்துடன் அவர்கள் பார்க்கும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Virat Kohli is practicing batting in the Nets sessions and Shreyas Iyer and Ishan Kishan watching Virat's batting .#StrongerTogether #TeamIndia #T20WorldCup pic.twitter.com/20WZPpsZU6
— AMAN GOYAL ?? (@AMAN_VK18_CR7) October 28, 2021