கோவைக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய ஈஷா யோகா மையம்
கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஈஷா யோகா மையம் சார்பாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.
இன்று மாலை நடந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் திரு.ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. திரு. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.