நம்ம சிறகுகளே இந்த பைக்குங்க தானே : சிம்புவுக்கும் கெளதமுவுக்கு பரிசு கொடுத்த ஐசரி கணேஷ்
சிம்பு நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு வழங்கியுள்ளார்.
வெந்து தணிந்தது காடு
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு . கடந்த வாரம் வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. முக்கியமாக இந்த படத்தின் சிம்புவின் நடிப்பினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராயல் என்பீல்ட் சொகுசு கார்
இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படம் வெற்றி பெற்றதால் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகிழ்ச்சியில் உள்ளார்.
அதை சிறப்பிக்கும் விதமாக படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்பீல்ட் பைக்கும், நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.