டி20 - யெல்லாம் சும்மா, 50 ஓவர் தான் பெஸ்ட், - கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 97 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார், ஆனால் தோனியின் அந்த சிக்ஸ் உலக கோப்பைக்கு ஒரு எனர்ஜி டானிக் என்றே கூறவேண்டும்.
ஐசிசி ஒருமுறை தோனியின் சிக்சைப் போட்டு இந்தியா உலகக்கோப்பை வென்ற நாள் என்று போட்டபோது, கடுப்பான கம்பீர் நானும் அந்த மேட்சில 97 ரன்கள் எடுத்திருக்கேன்.என்று வம்பிழுத்தார்,
இந்நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் எனும்போது, நமக்கு அதன் மேல் ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது, ஆனால் 20 ஓவர் உலகக்கோப்பை அடிக்கடி நடத்தப்படும்போது அது அலுப்படைய வைத்து விடுவதாக கம்பீர் கூறியுள்ளார்
இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது:
"1981-ல் பிறந்து 90களில் கிரிக்கெட் ஆட்டங்களை 90-களில் பார்த்து, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதை நினைக்கும்போது அதுதான் சிறந்த பரிசு என்று தோன்றுகிறது,
அதே சமயம் டி20 உலகக்கோப்பை வெற்றியை விட 50 ஓவர் உலகக்கோப்பைதான் பெரிது. டி20 உலகக்கோப்பை இப்போது நடைபெறுகிறது, மீண்டும் அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது என கூறினார்.