நாங்க என்ன எதிரியா..ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?கொதித்த முகஸ்டாலின்!
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
டெல்லியில் இன்று 9வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் புறக்கணித்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்று பாதியிலே வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,'' நிதி ஆயோக் கூட்டத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது ஆனால் எனக்கு 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தரப்பட்டது.
என் மாநில பிரச்னைகள் குறித்து பேச முற்பட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது.இது எனக்கு ஏற்பட்ட அவமானம் எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளியேறினேன் என பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' "இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா..? ஒரு முதல்-மந்திரியை இப்படித்தான் நடத்துவதா..?
எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜனதா அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு கூட்டாட்சிக்கு தத்துவத்தில் எதிர்க்கட்சிகளின் உரையாடல்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.