இதுதான் லாக்டவுனா? .. வாகனங்களில் வரிசை கட்டி நிற்கும் சென்னை
தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கினை அறிவித்துள்ளது.
ஆனால் ஊரடங்கினை மதிக்காமல் பலரும் வீட்டை விட்டு வெளியே செல்வதை காணமுடிகிறது.
அதில் பலர் தேவையில்லாமல் வெளியே செல்கின்றனர். குறிப்பாக தமிழ்கத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை அண்ணாசாலையில் வழக்கமான வேலை நாட்களில் எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்குமோ அந்த அளவுக்கு உள்ளது.
சென்னையின் முக்கிய நுழைவு வாயிலான வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நிற்கின்றன.
அனைத்து வாகனங்களும் உள்ளே நுழையாத வகையில் போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டாலும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை .
சில நேரங்களில் வாகன ஓட்டிகள் உடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது .
கட்டுப்பாடுகள் எவ்வளவுதான் விதித்தாலும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது .