ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தானா? - வைரலாகும் புகைப்படம்

DMK BJP Palanivel Thiagarajan
By Thahir Aug 14, 2022 07:20 AM GMT
Report

ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தான் என்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி 

தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தானா? -  வைரலாகும் புகைப்படம் | Is This Cinderella In Matching Slippers

ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார் அதனால் ஏராளமான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு

பின்னர் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு ராணுவ வீரரின் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு சென்றனர். அப்போது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாஜகவினரை அப்புறப்படுத்தினர்.மேலும் செருப்பு வீசிய பாஜகவினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னிப்பு கோரிய சரவணன்

இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் நேரில் சந்தித்து அண்ணே என்னை மன்னிச்சிருங்க என மன்னிப்புக் கோரினார்.

ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தானா? -  வைரலாகும் புகைப்படம் | Is This Cinderella In Matching Slippers

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இனி பாஜகவில் தொடர விரும்பவில்லை எனவும் கூறினார்.இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.

அண்ணாமலை அறிக்கை 

இந்த நிலையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் சரவணன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தானா? -  வைரலாகும் புகைப்படம் | Is This Cinderella In Matching Slippers

ஆகவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சிண்டெரல்லா இவர் தானா?

இதனிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், நேற்று நடந்த நிகழ்வுகளை நான் பின்னர் கூறுகிறேன். தனது ஊழியர்கள் காணமல் போன செருப்பை எடுத்து வைத்துள்ளனர்.

சிண்ட்ரெல்லா அதை திரும்ப பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செருப்பின் உரிமையாளர் இவர்தான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தான் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒத்த செருப்பு சிண்ட்ரெல்லா இவர் தானா? -  வைரலாகும் புகைப்படம் | Is This Cinderella In Matching Slippers