நடிகை நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா? படம் வெளியாவதில் சிக்கல்..!
நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை இடைவெளியின்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு
இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனெக்ட். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது திரைப்படம் வெளியாவதில் சிக்கல் வெளியாகியுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இந்த கனெக்ட் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் சரியாக 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
வெளியாவதில் சிக்கல்
99 நிமிட திரைப்படம் இடைவெளியின்றி வெளியிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் இடைவெளியில்லை என்று படக்குழு தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திடீரென இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளதால், வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
திரைப்படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. விரைவில் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க முன்மொழிந்தவர்களே அச்சத்தால் எதிர்க்கின்றனர்: பிரபு எம் பி சாடல் IBC Tamil
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan