திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதா? செல்வப்பெருந்தகை கேள்வி!
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள், முஸ்லிம்கள், ஜைனர்கள் ஆகியோர் நீண்டகாலமாக அமைதியுடனும், நல்லிணக்கத்தோடும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழிபாட்டு முறைகளை பல தசாப்தங்களாக தங்களுக்குரிய இடங்களில் அமைதியாக முழு உரிமையுடன் செய்து வருகின்றனர். அதை சீர்குலைக்க யார் முயன்றாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை இருக்கிற அடிப்படையில் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறறேன். மதுரையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் உள்ளடக்கிய அனைத்து கட்சியினர் கூட்டத்தை வருவாய் கோட்ட அதிகாரி கூட்டி,
சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் திருப்பரங்குன்றம் மலையிலோ அல்லது வேறு பகுதிகளிலோ எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதா?
மதநல்லிணக்கம்
கந்தர் மலை என்று அழைப்பதா என்ற சர்ச்சையில் எவரும் ஈடுபடக் கூடாது. கடந்த காலங்களில் அந்த பகுதிகள் எப்படி அழைக்கப்பட்டதோ, அப்படியே தொடர்ந்து அழைக்கப்பட வேண்டும். அதை மாற்றுவதற்கு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை,
சுதந்திரத்திற்கு முன்பே நீண்ட நெடுங்காலமாக எந்தெந்த வழிபாட்டு தலத்தை எந்தெந்த மதத்தினர், எத்தகைய உரிமையுடன் அனுபவித்து வந்தார்களோ, அதேநிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
அந்த தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வழிபாட்டு இடங்களில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்பட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மிகுந்த கண்காணிப்போடு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.