கொரோனா இருக்கா? வீட்டிலிருந்தே இதை செய்யுங்கள்- தமிழக மக்களுக்கு ஓர் முக்கிய தகவல்

corona tamilnadu
By Fathima Apr 23, 2021 05:27 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை படு வேகமாக பரவி வருகிறது, தினந்தோறும் 10,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

முக கவசம் அணிவது கட்டாயம், அவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அறிகுறிகள் ஏதுமின்றி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கா, இல்லையா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம் என தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ள தகவலில், உடல் அசதி, வலி, கண் சிவந்து போதல், உடல் அரிப்பு, தொடர் வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குவது போன்றவையும் கொரோனா அறிகுறிகள் தான்.

லேசான அறிகுறிகள் தென்படும் போதே மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டில் இருந்து கொண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு, வீடுகளில் ஒரு அறையில், தொடர்ந்து ஆறு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால், மூச்சுத் திணறல், நடைபயிற்சிக்கு இடையூறு ஏற்படும்.

அவ்வாறு இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம், உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா மையத்தில் உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.