ஆதித் தமிழர்களின் மதம் புத்தமா? ஆசீவகமா? இந்து மதமா? - Suvadugal Ibc Tamil
சைவமும் ,வைணவமும் இந்த பாரத தேசத்தில் ,(அதாவது நமது இந்தியாவில் ) உச்சத்தில் இருந்த போது புதிய சிந்தனைகளுடன் புதிய மதங்கள் தோன்றின . அதில் சிறந்து விளங்கிய இரண்டு மதங்கள் புத்தமும் , சமணமும் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
இந்த இரண்டு மதங்களின் கோட்பாடுகளோடு ஒத்து போனமதம் ஆசீவக சமயம். இந்த சமயம் தமிழகத்தில் சிறந்து விளங்கியதாக கூறப்படும் இந்த சமயம் தென்னகத்தில் 14ம் நூற்றாண்டு வரையிலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜைனம், பெளத்தம் தோன்றிய காலத்தில் இந்த சமயம் பரவியததாகவும் வேதத்தையும் வேதப் பண்பாட்டையும் மறுத்து இந்த சமயம் தோற்றுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொல்லாமையும் புலால் உண்ணாமையும் இதனுடைய நெறியாக இருந்துள்ளன.
ஆசீவக வழிபாட்டில் அய்யனார் வழிபாடு முக்கியமானதாக கூறப்படுகிறது. அதனால்தான் அய்யனார் கோயிலில் பொங்கல் படைப்பது மட்டுமே வழக்கமாக இருப்பதை நாம் காணலாம் .
[
அங்கு இருக்கும் கருப்புசாமி, துண்டில்காரன், சாமுண்டி - போன்ற உப தெய்வங்களுக்கு கிடா வெட்டுவார்கள். ஆனால் அய்யனாருக்கும் பெரும்பாலும் சைவ உணவே படைக்கப்படும் .
இன்றும் நமது கிராமங்களின் எல்லை பகுதிகளிலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் வணங்கப்படும் அய்யனார் ஆசிவகத்தை சேர்ந்த தெய்வமா ? அங்கு செய்யப்படும் வழிப்பாட்டு நெறிமுறைகள் புத்தமதத்தை அடிப்படையாக கொண்டதா? ஆக அய்யனார் இந்துகடவுளாக மாறியது எப்படி ?
‘‘வாருங்கள் காண்போம் ஐபிசி தமிழின் சுவடுகள் நிகழ்ச்சியில்’’