11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!
Government of Tamil Nadu
By Thahir
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளார்.
பரவிய பரபரப்பு செய்தி
12ம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாகவும், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்துவதாலும், மாணவர்கள் தொடர்ந்து 3 பொதுத்தேர்வு எழுதுவதில் சோர்வு அடைவதாலும் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.