பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்; ஐஎஸ் பயங்கரவாத தலைவர் சென்னையில் கைது - NIA அதிரடி!
ஐஎஸ் பயங்கரவாத தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதி கைது
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பின் தலைவர் 'சையது நபில்' சென்னையில் கைது செய்துள்ளனர் என்ஐஏ (NIA) அதிகாரிகள்.
தமிழ்நாடு, கர்நாடகா என மாறி,மாறி தலைமறைவாக இருந்த சையது நபில் போலி ஆவணங்கள் மூலமாக நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
கைதான சையது நபிலிடம் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது ஆகியவை என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃபி என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.