உலக நாடுகளை மிரட்டிய அதிபர் கிம் ஜாங் உன்-இன் மகள் இவர் தானா?
அணு ஆயதப்பட்டனை அழுத்தி விடுவேன் என கூறி உலக நாடுகளை மிரட்டி வந்தவர் தான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
இவர் தான் அதிபர் மகளா?
இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வகையில் மீண்டும் பொது நிகழ்ச்சியில் தோன்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அதிபர் கிம் ஜாங் உன்.

அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது சகோதரி பொதுவெளியில் தோன்றி வருகின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் கிம் ஜாங் உன் மகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது மேடை ஒன்றில் கிம் ஜூ பே என்ற சிறுமி அங்கிருந்த சிறுமிகளுடன் நடனமாடினார். இவர் கிம் ஜாங் உன்-இன் மகள் என்று செய்திகள் வெளியாகின.
காரணம் அந்த நிகழ்வில் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்ட நிலையில் கிம் ஜாங் உன்-இன் மனைவி ரி சோல் ஜூ மேடையிலிருந்த பல சிறுமிகளில் அந்த சிறுமியை அரவணைத்ததால் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.