திமிங்கலத்தை உளவாளியாக பயன்படுத்தும் ரஷ்யா - நடுக்ககத்தில் அண்டை நாடுகள்

Sweden Russia
By Thahir May 31, 2023 12:30 PM GMT
Report

ரஷ்ய தனது உளவாளியாக வெண் திமிங்கலத்தை பயன்படுத்துவதாக ஸ்வீடன் குற்றம் சாட்டியுள்ளது.

உளவு பணிகளில் ஈடுபடும் திமிங்கலம்

பெலுகா வகை திமிலங்கள் மனிதர்களிடம் எளிதாக பழகக்கூடியவை. இந்த வகை திமிங்கலங்கள் ஆர்க்டிக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.

Is Russia spying on Sweden through whales?

இந்த வகை திமிங்கலத்தை கண்டு அஞ்சுகிறார்கள் ஸ்வீடன் நாட்டு மக்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்வீடனின் வடக்கு பகுதியான பின்மார் கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த பெலுகா வகை திமிங்கலம் ஒன்றின் கழுத்து பகுதியில் ஒருவித பெல்ட் இருந்ததும் அதில் ஒரு சீக்ரெட் கேமரா பொருத்தப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வையான திமிங்கலம் ரஷ்ய கடற்படையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு உளவு பார்ப்பதற்காக ஸ்வீடன் கடற்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஸ்வீடன் நம்பியது.

அன்று முதல் ஸ்வீடன் மக்கள் பெலுகா திமிங்கலத்தை ஒரு வித அச்சத்துடனே பார்த்து வருகின்றனர். அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றி கொண்டு வந்த இந்த பெலுகா திமிங்கலம் தற்போது மெல்ல மெல்ல நகர்ந்து ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் ஹன்னெபோஸ்ட் ராண்டில் தென்பட தொடங்கியுள்ளது.

விரைவாக நீந்தும் திமிங்கலத்தால் சந்தேகம்

இது குறித்து பேசிய கடல் சார் ஆய்வாளர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட் பேசுகையில், மெதுவாக்ச் சென்று கொண்டிருந்த அந்த திமிங்கலம் திடீரென ஏன் வேகமெடுத்தது எனத் தெரியவில்லை. எப்போதும் கடலில் அது இவ்வளவு விரைவாக நீந்துவது என்பது புதிராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த பெலுகா திமிங்கலகத்திற்கு 13, 14 வயது இருக்கலாம். இந்த காலகட்டத்தில் அதன் உடலில் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் என்பதால் தனக்கு துணையைக் கண்டுபிடிக்க வேகமாக நகர தொடங்கியிருக்கலாம் என்று கூறினார்.

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெண் திமிங்கலம் ஸ்வீடன் கடல் பகுதியில் உலா வருவதால் ரஷ்யா உளவு பார்ப்பதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது ஸ்வீடன்.

ஸ்வீடனின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.