இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா விலகலா?
இந்திய அணியில் உள்ள அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் வயதாகிவிட்டதால் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருப்பார்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதிரடி பதில் கொடுத்துள்ளார் ரோகித் சர்மா.
தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் காவஸ்கர் டிராபியில் இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஆல்ரவுண்டர்கள். அதிலும் குறிப்பாக ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினர்.
இந்த நிலையில், 3 பேருக்கும் வயதாகிவிட்டதால் கவாஸ்கர் டிராபி தொடரில் இடம்பெறுவார்களா? என செய்தியாளர்கள் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.
நான் இருப்பேனா என்பது தெரியவில்லை
இதற்கு பதில் அளித்து பேசிய ரோகித் சர்மா உண்மையில் அவர்கள் அணியில் இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது. நானும் இருப்பேனா என்பதும் எனக்கு தெரியாது.
4 வருடங்கள் இருக்கிறது அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணிக்கு இவர்கள் இருவரின் பெயல்பாடும் கண்டிப்பாக தேவை அணியில் இருக்க வேண்டும்.
இந்திய வயதிலும் நீண்ட பார்ட்னர்ஷிப்பை எப்படி உடைத்தார்கள் என்று பார்க்க முடிந்தது. “குறிப்பாக, இந்திய கண்டிசன்களில் அவர்களுக்கு மிஞ்சிய வீரர்கள் வேறு எவரும் இல்லை என்று கூறலாம்.
இத்தனை வருடம் இந்திய அணி வெற்றிகரமாக இருப்பதற்கு இந்த இருவரின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல நீண்ட காலமாக இந்திய அணிக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் இல்லாத இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இன்னும் சில ஆண்டுகள் அவர்கள் அணியில் நீடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.” என்றார்.