காகித ரூபாய் நோட்டுகள் இனி செல்லதா?- மத்திய அரசு விளக்கம்

Money
By Yashini Jun 11, 2026 10:32 AM GMT
Report

சமூக ஊடகங்களில், காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக  தகவல்கள் பரவின.

மேலும், ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வதந்திகள் பரவின.

இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவலும் முற்றிலும் தவறானது என கூறப்பட்டுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.