பரபர அரசியல் சூழல் - நெல்லையில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி..?

Rahul Gandhi Tirunelveli
By Karthick Feb 29, 2024 09:16 PM GMT
Report

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தியிடம் வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளிவருகின்றன.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வாகினார்.

is-rahul-gandhi-is-the-candidateof-thirunelveli

இம்முறை அவரை மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வைக்கவேண்டும் என உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

பிரதமரே இல்லாதபோது எதுக்கு அனைத்துக்கட்சி கூட்டம்? - ராகுல் காந்தி

பிரதமரே இல்லாதபோது எதுக்கு அனைத்துக்கட்சி கூட்டம்? - ராகுல் காந்தி

திருநெல்வேலியில்....

ஆனால், இதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தான், திருநெல்வேலி ராகுல் காந்தி பேரவை சார்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

is-rahul-gandhi-is-the-candidateof-thirunelveli

அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி ராகுல் காந்தி பேரவை துணை தலைவர்கள் கல்யாண சுந்தரம், கே.சி.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.