அசுரர் கையில் அதிமுக - தனி கட்சியா..? உரிமை மீட்பு குழுவிடம் ஓபிஎஸ் பரபரப்பு தகவல்
அசுரர்கள் கையில் அதிமுக சிக்கியிருப்பதாக குறிப்பிட்டு அதனை மீட்பதே இலக்கு என அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் உரிமை மீட்புகுழு
தமிழ்கத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் கொங்கு மண்டலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு அடுத்து நேற்று(28-12-23) நாமக்கல் மாவட்டம் சென்றுள்ளார். அங்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொங்கு மண்டலம் அம்மாவின் கோட்டை என மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது என தெரிவித்து, கடந்த காலங்களில் கோவையில் மக்களை சந்திக்க வந்த போது எனக்கு கிடைத்த வரவேற்பு ஈபிஎஸ் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றார்.
தனி கட்சியா..?
அதிமுகவின் தொண்டன் என்றால் சொன்னால் தமிழக மக்களிடம் நல்ல மரியாதை இருந்தது என்றும் இன்று அது இரண்டாக முன்றாக பிரிந்து கேள்விகுறி ? ஆகி விட்டதாக வருத்தம் தெரிவித்த அவர், அதிமுக சட்டவிதிகளின்படி, சாதாரண தொண்டனும் பதவி ஏற்க முடியும் என்ற விதி படி நாங்கள் பதவி ஏற்றோம் என்று சுட்டிக்காட்டினார்.
மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே சட்ட திட்டங்களை, அதே நிலையை மீண்டும் உருவாக்குவோம் என்று உறுதிப்பட தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் தனி கட்சி தொடங்கப்போவது இல்லை என்று தெளிவுபடுத்தி அசுரர்கள் கையில் இருக்கும் அதிமுகவை மீட்டு எடுப்பதே இலக்கு என்றார்.