அர்ஜென்டினா அணியில் இருந்து விடைபெறுகிறாரா மெஸ்சி? ரசிகர்கள் ஏக்கம்

Lionel Messi FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Thahir Dec 19, 2022 03:29 AM GMT
Report

அர்ஜென்டினா அணியில் இருந்து விடைபெற உள்ளாரா மெஸ்சி அவரே சொன்ன பதில்.

கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று இரவு கத்தார் நாட்டில் உள்ள லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்றது.

விறுவிறுபுடன் சென்ற இந்த போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் 3 - 3 என்ற கணக்கில் சமமாக இருந்த நிலையில் இறுதி முடிவுக்காக பொனல்டி ஷுட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

Is Messi saying goodbye to Argentina?

இதை சமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா தங்களுக்கு வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றி அசத்தியது.

பின்னர் பிரான்ஸ் அணி தங்களுக்கு வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளை 2 வீணடித்தது. இதையடுத்து அர்ஜென்டினா அணி 4 -2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

36 வருடங்களுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி தென் அமெரிக்காவையே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடைபெறுகிறரா மெஸ்சி?

இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய மெஸ்சி, உலகக் கோப்பையை வெல்வது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன்.

Is Messi saying goodbye to Argentina?

2014 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது உட்பட, கால்பந்தின் கால்பந்தின் மிகப்பெரிய களத்தில் பல ஏமாற்றங்களை சந்தித்தேன். ஆனால், தனக்குரியை நேரம் ஒருநாள் கண்டிப்பாக வரும் என்று உணர்ந்தேன்.

இந்த தொடர் இப்படி முடிவது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் எனக்கு இதை வழங்கப் போகிறார் என்று நான் முன்பு சொன்னேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த நேரத்தில் அது நடக்கும் என்று நான் உணர்ந்தேன்.

உலகக் கோப்பை "அழகானது" இவ்வாறு அவர் கூறினார். ஆட்டத்திற்குப் பிறகு மெஸ்ஸி தனது குடும்பத்தினரையும் அணியினரையும் கட்டிப்பிடித்தார்.

35 வயதான லியோனல் மெஸ்சி, அர்ஜென்டினாவுக்காக 172 போட்டிகளில் விளையாடியுள்ளார், 2005 இல் அறிமுகமானதில் இருந்து 98 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.