டெல்லி பொங்கல் விழாவில் தனி மரியாதை..! பாஜகவில் இணைகிறார் மீனா..?
டெல்லியில் நடைபெற்ற எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் பிரதமர் மோடி முதல் நடிகை மீனா என பலருக்கும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் விழா
மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் டெல்லி இல்லத்தில், பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சரான இல்ல விழா என்பதால் இதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது.
இந்த விழாவில், நாட்டின் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மீனா
விழாவில், பிரதமர் மோடி, அனைவர்க்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் என கூறி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் தமிழ் நடிகை மீனா கலந்து கொண்டதே தற்போது பெரும் வைரலாகி பேசும் பொருளாக மாறியுள்ளது.
மத்திய அமைச்சர் நிகழ்வில், நடிகை ஒருவருக்கு இடம் கிடைத்ததன் காரணமாக அவர், பாஜகவில் இணையப்போகிறாரா? என்ற கேள்விகள் தற்போது உலா வர துவங்கிவிட்டன.
ஏற்கனவே தமிழகத்தில் நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் பாஜகவில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.