கையில் வைர மோதிரம்....திருப்பதியில் சீக்ரெட்டாக முடிந்த ஜான்வி கபூரின் நிச்சயம்..?

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு திருப்பதியில் சத்தமில்லாமல் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகை ஜான்வி கபூர்
இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அநேக மொழிகளில் டாப் நடிகையாக வளம் வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
தற்போது இவர் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - கொரடலா சிவா இணையும் "தேவரா" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதை தவிர அவர் நடிப்பில் தற்போது இரண்டு பாலிவுட் படங்களும் தயாராகி வருகின்றது.
நிச்சயமானதா?
இந்நிலையில் தற்போது ஜான்வி கபூருக்கு திருமண நிச்சயம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் நடிகை ஜான்வி கபூர் தனது நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
அப்போது அவரது கையில் பெரிய வைர மோதிரம் ஒன்று இருந்ததால் இந்த கருத்துக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னதாக இருவரும் நிறைய இடங்களில் ஒன்றாக காணப்பட்டபோதும் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்விக்கு இருவரும் ஆம் என்றோ மறுத்தோ கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.