வேகமாக பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்..தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 900க்கும் மேல் இருந்தது. இன்று 1044 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துமனையில் 68 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த காய்ச்சலால் பீதி அடைய வேண்டாம். வழக்கமாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட கூடிய காய்ச்சல் தான். காய்ச்சலுக்கான அறிகுறிகள் தலைவலி, உடல் வலி, சளி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகள், பெரியவர்கள் தும்மல் வரும் போது கை குட்டைகளை வைத்து முடிக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் முககவசம், தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் என கூறிய அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
ஒட்டுமொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை.
விடுமுறை அளித்தால் கல்வி பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.