"பாரத்" என பெயர் மாறுகிறதா "இந்தியா"? எழுந்த புது சர்ச்சைகள்
இந்தியா என்றில்லாமல் ஜி 20 மாநாடு அழைப்பிதழில் "பாரத்" என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜி 20 மாநாடு அழைப்பிதழால் சர்ச்சை..?
ஜி 20 மாநாடு அழைப்பிதழ் இந்தியாவில் நடைபெறத்தவுள்ள ஜி 20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என அச்சிடப்படாமல், பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
So the news is indeed true.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of 'President of Bharat' instead of the usual 'President of India'.
Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அரசியல் சாசனத்தின் 1-வது பிரிவில் இடம்பெற்றுள்ள "மாநிலங்களின் ஒன்றியம்" என்பதற்கும் அச்சுறுத்தல் இது என ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
பெயர் மாறுகிறதா இந்தியா..?
இதற்கிடையில் பாரத குடியரசுக்கு வாழ்த்துக்கள் என அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் பாரத குடியரசு அமுத காலத்தை நோக்கி நடைபோடுவதை மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது என ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்தியா என்ற தேசத்தின் பெயர் பாரத் என பெயர்மாற்றப்படுகிறதா? என கேள்விகள் எழுந்துள்ளது.
REPUBLIC OF BHARAT - happy and proud that our civilisation is marching ahead boldly towards AMRIT KAAL
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 5, 2023
இது குறித்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமை வழக்கமாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிடப்படும் அழைப்புகளில் "இந்தியா" என்றே குறிப்பிடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, "நாட்டை எந்தளவிற்கு அவமதிக்க முடியுமோ அந்தளவிற்கு பாஜக அவமதிக்கிறது என குற்றம்சாட்டி தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்பும் பணிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.
ஆளுநரின் பதிவு
அதே போல, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என தனது ஆசிரியர் தின வாழ்த்து குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
I extend my warm greetings and good wishes to all teachers on #NationalTeachersDay. Let us express our gratitude to our teachers for their pivotal role in building strong and capable Bharath by shaping the calibre and character of our young minds.: Governor Ravi pic.twitter.com/RUSYGEmV61
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 5, 2023
இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.