கணவர் வீட்டில் மனைவியின் தோழியை தங்க வைப்பது கொடுமை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கணவரின் வீட்டில் மனைவி தனது தோழி தங்க வைத்தது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொல்கத்தா
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தீரஜ் குயின் என்பவர் தனுஸ்ரீயை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு மனைவி தனுஸ்ரீ தனது தோழியான மௌசுமி பாலுவையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கணவரது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும், தனது தோழியை தன்னுடன் தங்க வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தீரஜ் குயின் மனைவியிடம் பேசியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தாம்பத்தியத்திற்கோ, கணவருடன் நேரத்தைச் செலவிடுவதற்கோ மனைவி விரும்பவில்லை.
இதனையடுத்து தீரஜ் குயின் விவாகரத்து கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் அங்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேலும் கணவனின் வழக்கிற்கு எதிராக மனைவியும் புகார் அளித்துள்ளார்.
உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் , இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில்,
கணவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் மனைவிக்கு தாம்பத்திய உறவிலும், குழந்தையைப் பெற்றுக்கொள்வதிலும் விருப்பமில்லை என்று கூறுவது கொடுமையாகவே கருதப்படும் என்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.