ராமர் அசைவ உணவு சாப்பிடுவார் தெரியுமா..? மூத்த தலைவரின் கருத்தால் சர்ச்சை..!

Nationalist Congress Party BJP Uttar Pradesh
By Karthick Jan 04, 2024 06:30 AM GMT
Report

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் அதனை வைத்து மத்திய ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராமர் அசைவரா..?

நாம் வரலாற்றைப் படிப்பதில்லை, அரசியலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. ராமர் நம்முடையவர். நாம் பகுஜன்கள். வேட்டையாடி சாப்பிடுவது யார்? ராம் ஒருபோதும் சைவ உணவு உண்பவர் அல்ல.

அவர் ஒரு அசைவ உணவு உண்பவர். காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி சைவ உணவு உண்பவராக இருக்க முடியும் - இது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார். இந்த கருத்திற்கு தற்போது பல எதிர்மறையான கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

பாஜகவின் கோரிக்கை

இவரின் இந்த கருத்திற்கு காரணம் பாஜக தரப்பில் ராமர் கோவில் திறப்பன்று Dry Day வாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் தான்.

is-god-ram-a-vegetarian-ncp-leader-raises-question

ராமர் கோவில் திறப்பு வரும் 22 -ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அசைவ உணவுகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைகைப்பட்டுள்ளது. இந்த கருத்திற்கு எதிர்க்கருத்தாகவே தான் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜிதேந்திர அவாத் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.