IPL 2025; CSK அணியின் இந்த இரு வீரர்களும் சகோதரர்களா?

Chennai Super Kings Rachin Ravindra IPL 2025
By Karthikraja Mar 22, 2025 10:56 AM GMT
Report

CSK அணியின் இரு வீரர்கள் பார்ப்பதற்கு ஒன்று போல் உள்ளதால் அவர்கள் சகோதரர்களா என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

2025 ஐபிஎல்

18 வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நடைபெறும் முதல் போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

ipl cup 2025

நாளை சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்ற நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் தோனியை வழியனுப்ப தீவிர முனைப்பில் உள்ளது சென்னை அணி.

இருவரும் சகோதரர்களா?

இந்நிலையில், சென்னை அணி வீரர்கள் இருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் சகோதரர்களா என இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

சென்னை அணியில் உள்ள நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும், தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த்தும் பார்ப்பதற்கு சகோதரர்கள் மாதிரியே உள்ளனர். 

சமீபத்தில் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேவைபட்டால் ரச்சினுக்கு பதிலாக சித்தார்த்தை களமிறக்கலாம் இருவரும் ஒன்று போல் உள்ளனர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரச்சின் ரவீந்திரா

ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடி வந்தாலும் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அவரின் பெற்றோர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். 

rachin raveendra

பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றி வந்த அவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

andre siddharth

ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த்தை, 30 லட்சத்திற்கு CSK அணி ஒப்பந்தம் செய்துள்ளது.