இனி ரேசன் கடையிலேயே கிடைக்குமா தேங்காய் எண்ணெய் - அமைச்சர் விளக்கம்

Government of Tamil Nadu R. Sakkarapani
By Thahir Jan 08, 2023 09:38 AM GMT
Report

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்

தற்போது ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை மற்றும் பாமாயில் உள்பட ஒருசில பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இனி ரேசன் கடையிலேயே கிடைக்குமா தேங்காய் எண்ணெய் - அமைச்சர் விளக்கம் | Is Coconut Oil Available In Ration Shops

ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்குவது படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அதே போல் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.