ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழப்பு - தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

Pakistan
By Swetha Subash Apr 22, 2022 07:09 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் வசித்து வரும் ஹசாரா இன மக்களுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று இரண்டவது முறையாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழப்பு - தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு | Is Claims Responsibilty For Attack In Afghanisthan

மேலும், காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுபான்மையின மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.