இந்திய விமானங்களைக் குறிவைக்கிறதா சீனா?

By Niraj David Dec 30, 2021 10:52 AM GMT
Report

இந்திய விமானப்பகை;குச் சொந்தமான Mi-17 ரக உலங்கு வாணூர்தி ஒன்று கடந்த 08.12.2021 அன்று தமிழ்நாடு, குண்ணுரில் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்தியாவின் முப்படைகளின் தளபதி Gen Bipin Rawat உட்பட 14பேர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

நடைபெற்றது விபத்தல்ல திட்டமிட்ட சதி என்றும், அந்த சதியின் பின்னணியில் சீனாவின் கரங்கள் இருக்கின்றன என்றும் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

அதேவேளை, சைபர் தாக்குதலின் மூலம் அந்த விமானத்தை சீனா செயலிழக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் சில போரியல் ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.

விமானங்களை சைபர் தாக்குதல்கள் மூலம் கைப்பற்ற அல்லது செயலிழக்கச் செய்ய முடியுமா?.. அந்தச் சூட்சுமம் சீனாவிடம் இருக்கின்றதா?.. என்று ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: