கனியும் காதல்?? விரைவில் "அந்த" நடிகையை திருமணம் செய்யும் அனிருத்..?
பிரபல நடிகையுடன் ஏற்பட்ட காதலை தற்போது இசையமைப்பாளர் அனிருத் திருமண பந்தமாக மாற்றப்போவதாக கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அனிருத்
தனுஷ் நடிப்பில் வெளியான "3" படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலகளவில் கவனம் பெற்றார். அந்த படத்தில் இடம்பெற்ற Why this கொலவெறி டி" பாடல் மிக பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை கொடுத்து வரும் அனிருத், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ஜவான்" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கின்றார்.
தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக இசையமைத்து வரும் அனிருத் குறித்து செய்தி ஒன்று மிகவும் வைரலாகி வருகின்றது.
நடிகையுடன் திருமணமா..?
சில ஆண்டுகள் முன்பு இவருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மத்தியில் காதல் மலர்ந்ததாக செய்திகள் வேகமாக பரவின. ஆனால் அப்போதே அதனை அவர்கள் இருவருமே மறுத்த நிலையில், தற்போது மீண்டும் வடஇந்திய ஊடகங்கள் மீண்டும் இது குறித்து செய்திகளை வெளியிட துவங்கியுள்ளன.
இந்த நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, “ அது தவறான செய்தி.. அனிருத் எனக்கு நல்ல நண்பர்.” என்று பதிலளித்து இருக்கிறார்.இது வெறும் வதந்தியே என அவர் மறுத்துள்ள நிலையிலும் பல ஊடங்களில் இது குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.