சித்தார்த் இறந்துவிட்டார்? டுவிட்டரில் அவரே வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

siddharth rip
By Fathima Sep 03, 2021 06:27 AM GMT
Report

தான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டதற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவுசெய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த், சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

அரசியல் ரீதியாக விமர்சனங்களை கூறுவதில் தொடங்கி சமூக அக்கறையுடன் கருத்துகளையும் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக எண்ணி கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட, அது வைரலானது.

இதை தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள சித்தார்த், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வெற்றியாளர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணடைந்துவிட்டார், இவருக்கு பதிலாக உங்கள் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.